ரூபாயின் வீழ்ச்சியால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக் கூடும்ரூபாயின் வீழ்ச்சியால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக் கூடும்ரூபாயின் வீழ்ச்சியால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக் கூடும்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால், மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சுமார் 60 வகையான மருந்து வகைகளின் விலைகளும் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவி்ன் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம். அதற்கமைய, மருந்து விலைகளும் அதிகரிக்கக்கூடும். இது குறித்து நாம் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாம் பெரும்பாலான மருந்துகளை இறக்குமதி செய்கிறோம். அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது, எனினும் சில குறிப்பிட்ட மருந்துகளின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

Related Posts