ரிஷாட்டின் பொறுப்பில் வடக்கின் புனர்வாழ்வு!

வடக்கின் புனர்வாழ்வு மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பொறுப்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் வடக்கு மக்களின் குடியேற்றங்கள் மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பணிகளை அமைச்சர் ரிஷாட் மிக நேர்த்தியான முறையில் முன்னெடுத்திருந்ததாக சுட்டிக்காட்டி அதற்கமைய இந்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts