Ad Widget

ரஷ்யா – வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

ரஷ்யா – வட கொரியா இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகக் ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில்,

சமீபத்திய வாரங்களில் வட கொரியா 1,000 க்கும் மேற்பட்ட இராணுவ தளபாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆழமாகிவரும் இராணுவ உறவு கவலை அளிக்கிறது.

இந்த ஆயுதம் வினியோகம், உக்ரைனிய நகரங்களை தாக்க பயன்படுவதுடன், உக்ரைன் பொதுமக்களை கொல்லவும் பயன்படும்.

மேலும், ரஷ்யாவின் சட்ட விரோத போர் தொடர வழி வகுக்கும்” என்றார்.

சமீபத்தில் கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சென்றது, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்த கிம் ஜாங் உன், ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்ததாக பல்வேறு தகவல்கள் வெளிவந்திருந்தன.

இதையடுத்து ரஷ்ய பயணத்தை முடித்த வட கொரிய ஜனாதிபதி, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தொடருந்தில் நாடு திரும்பியிருந்தார்.

Related Posts