யாழ்ப்பாணம், அரியாலை – பூங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் புதன்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது மகளும் படுகாயமடைந்துள்ளார்.

பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சி கடமையில் பணியாற்றி வந்த நாகராசா சூரியகுமார் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.