ரயில் கடவையில் படுத்திருந்தவர் பலி

நாவற்குழி – புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த நபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

இவர் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்று யாழ். அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என தெரியவந்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதியதில் படுகாயமடைந்த இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts