Ad Widget

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுகின்றன: யாழ். அரச அதிபர்

Suntharam arumai_CIதமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் பலாலி வடக்கு மற்றும் கிழக்கு வளலாய் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் அங்கு மீளக்குடியேற விரும்பவில்லை என தெரிவிப்பதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள 5863 குடும்பங்களில் 1129 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த சமயம் ஒரே குடும்பங்களாக இருந்தவர்கள் தற்போது, தனித்தனி குடும்பங்களாக மாறியிருக்கின்றனர். இவர்களும் தங்களுக்கு காணிகள் வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். ஆனால் இவர்களின் ஒருவருக்கு உரித்துடைய காணியே வலி.வடக்கில் இருக்கின்றது.

அத்துடன், வலி.வடக்கில் காணி வைத்திருப்பவர்கள் இன்னொருவருக்கு தமது காணியினை கொடுக்கவும் முன்வரமாட்டார்கள். இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், அவர்களின் தொழில் மற்றும் கலாசாரத்தினைக் கருத்திற்கொண்டு அதற்கேற்ற இடங்களில் காணிகளை வழங்கி வருகின்றோம்.

அவ்வாறு காணிகள் வழங்கி மீள்குடியேற்றம் செய்யப்படுவர்கள் அந்த பகுதியில் தமது உறவினர்களுடன் கூடி வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதனை அம்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், பலாலி வடக்கு, பலாலி கிழக்கு மற்றும் வலளாய் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளவர்களின் காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

மீள்குடியேற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்டார் கமல்!

வளலாயில் மீள்குடியமர இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவு

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

Related Posts