Ad Widget

யாழ்.வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து 85 டாக்டர்கள் இடமாற்றம்!- பணிகளை முடக்கும் நடவடிக்கை!- சுரேஸ் பா.உ.

SURESHயாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து 85 வைத்தியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முடக்கும் நடவடிக்கை, என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்படவிருக்கும் வைத்தியர்களுக்கு பதிலாக பதிலீட்டு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கைகள் வேண்டும்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 412 வைத்தியர்கள் தேவையாக உள்ளபோதும் தற்போது 322 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர். இந்நிலையில் 85 வைத்தியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த இடமாற்றங்களை சுகாதார அமைச்சு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

ஒரே நேரத்தில் இவ்வளவு வைத்தியர்களை இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முற்றாக முடக்கும் செயல். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்களும் வைத்தியர்களும் இன்னமும் தேவையாகவுள்ளனர் என்றார்.

இது தொடர்பாக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.சிறி­ப­வா­னந்­த­ராஜா தெரி­வித்துள்ளதாவது,

யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற 90 வைத்­தி­யர்­களை உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யு­மாறு சுகா­தார அமைச்சின் ஊடாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

உட­ன­டி­யாக வைத்­தி­யர்­களை இட­மாற்றம் செய்­ய­மு­டி­யாது கட்டம் கட்­ட­மாக இட­மாற்றம் செய்ய முடி­யு­மென சுகா­தார அமைச்­சுக்கு வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­தினர் பதில் கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ளனர் என யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.சிறி­ப­வா­னந்­த­ராஜா தெரி­வித்தார்.

யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­பு­ரியும் வைத்­தி­யர்­களின் இட­மாற்றம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மத்­திய சுகா­தார அமைச்சின் ஊடாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம், யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற 90 வைத்­தி­யர்­களை உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யக்­கோரி பெயர்ப் படிவம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது.

அதில் 13 வைத்­தி­யர்­கள் எந்­த­வி­த­மான மாற்று ஏற்­பா­டு­க­ளு­மின்றி உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யப்­பட வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகு­தி­களில் உள்ள வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­யாற்­று­கின்ற வைத்­தி­யர்கள் ஒரு வரு­டத்தின் பின்னர் இட­மாற்றம் பெறலாம் என்ற பழைய நடை­மு­றையை வைத்துக் கொண்டு இவ் நட­வ­டிக்­கையை அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் மேற்­கொண்­டுள்­ளது.

எமது வைத்­தி­ய­சா­லைக்கு 432 வைத்­தி­யர்கள் தேவை­யாக உள்ள இடத்தில் 324 வைத்­தி­யர்­களே கட­மையில் உள்­ளனர்.

ஏற்­க­னவே வைத்­தி­யர்கள் குறை­வாக உள்ள இடத்தில் 90 வைத்தியர்களை இடமாற்றம் செய்து புதிய வைத்தியர்களை நியமித்தால் எமது வைத்தியசாலையின் சிகிச்சைத் தரம் குறைவடைந்து போய்விடும்.

எனவே வைத்தியர்களை கட்டம் கட்டமாக இடமாற்றம் செய்யக் கோரி சுகாதார அமைச்சுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.

Related Posts