Ad Widget

யாழ்.வீதிப்போக்குவரத்தில் புதிய நடைமுறை!

MAYOR -yokeswareyயாழ்.வைரவர் கோவில் வீதியை காலை 7.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ஒரு வழிப் பாதையாக மாற்றுவதற்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகருக்குட்பட்ட வீதிகள் போக்குவரத்து நெருக்கடிக்குட்படுவதால் மக்களின் தேவை காரணமாக வைரவர் கோவில் வீதியை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்வது தொடர்பாக நேற்று யாழ் மாநகர சபை முதல்வர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஆட்டோ சங்கம், மினிபஸ்சங்கம், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இந்த கலந்துரையாடலின் இறுதியில் (01.05.2013) ஆம் திகதி புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் வகையில் புதிய ஏழு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

  • வைரவர் கோவில் வீதி ஒரு வழிப் பாதை காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரைக்குமாக மாற்றுதல்
  • கன்னாதிட்டி சந்தியில் இருந்து காங்கேசன் துறை வீதி வரை ஒருவழிப்பாதையாக மாற்றுதல்
  • காப்பற் வீதியினை சேதப்படுத்துவது (கற்பூரம் எரித்தல்) தடைசெய்யப்பட்டுள்ளது அவ்வாறு காப்பற் வீதியில் வைத்து கற்பூரம் எரிப்பவர்கள் பாதுகாப்பான நடைமுறை பின்பற்ற வேண்டும் இவை தவறும் பட்சத்தில் குற்றப்பணமாக 10ஆயிரம் ரூபா அறவிடப்படும்.
  • காங்கேசன் துறை வீதி அகலிப்பு பணிகள் முடிவுற்றிருப்பதால் இந்த பாதையை இருவழிப்பாதையாக பாவிப்பதற்கு அனுமதிக்கப்படுவது.
  • யாழ்.நகரில் பிரயாணம் செய்யும் ஆட்டோக்கள் அனைத்தும் பதியப்பட வேண்டும், பதியப்பட்ட ஆட்டோக்களுக்கு யாழ் மாநகர சபையால் ஸ்ரிக்கர் வழங்கப்படும் .
  • ஆட்டோ சாரதிகள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும்.
  • அனைத்து ஆட்டோவிலும் மீற்றர் பொருத்தப்பட வேண்டும்.

போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Related Posts