Ad Widget

யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் குழப்பம்

tnaயாழ்.மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமது கட்சி சார்பாக 10 வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் போட்யிடுவதற்கான வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கான ஆசனப்பங்கீடு என்பன தொடர்பில் ஆராயும் கூட்டம் கடந்த நான்கு நாட்கள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்றன.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கான வேட்பாளர் தெரிவு தொடர்பில் நியமனக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி யாழ்.மாவட்டத்தில் போட்யிடுவதற்கு முதலமைச்சர் வேட்பாளர் உட்பட 10 ஆசனங்கள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் தாங்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம் நீங்களே போட்டியிடுங்கள் என்று தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே யாழ்.மாவட்டத்திற்கு முதலமைச்சர் வேட்பாளர் உட்பட தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழரசுக் கட்சியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் மேலதிக வேட்பாளர்களை கோருவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts