Ad Widget

யாழ் மாவட்ட த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது !

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் த.தே.ம.முன்னணியின் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அம்பாறையில் அவர்கள் முதலாவதாக் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள நிலையில்

யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள த.தே.ம.முன்னணியின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது.

7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்தரன் , பத்மினி சிதம்பரநாதன், மணிவண்ணன், யாழ் பல்கலைக்கழக நிர்வாக கிளை அலுவலர் ஒருவர், தென்மராட்சியில்  ஒருவர்,  பெயர்கள் பேசப்படுகின்றன. அனந்தி அவர்கள் முன்னணியினை அணுகினால் இடம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த போதிலும் அனந்தி இன்னும் முன்னணியில் விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது .இதே வேளை யாழ்ப்பாண தொகுதியில் ஆனந்தி என்ற பெண் ஆசிரியரின் பெயரும் பிரேரிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது

இன்னும் 4 இடங்களுக்கான பெயர்கள்  வெளிவரவில்லை. நாளை கூட்டமைப்பினர் வேட்புனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில் அவர்களுக்கு போட்டியாக களமிறங்கும் முன்னணியின் வேட்பாளர் பட்டியல் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

Related Posts