Ad Widget

யாழ்.மாவட்ட இந்து ஆலயங்களுக்கு நிதி வழங்கல்

எமது அரசாங்கம் எல்லா மதங்களையும் சமமாகப் பார்ப்பதால் இந்த வருடமும் நாடளாவிய ரீதியில் இந்துமத ஆலயங்கள் பலவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதியொதுக்கீடுகளை செய்யவுள்ளது. இதில் யாழ்.மாவட்டத்திற்கென 61 இந்து ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

minister-cash-temble

மேற்படி ஆலயங்களுக்கான காசோலைகளை வழங்கும் வைபவம் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திரு.அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலயங்களின் முழுமையான புனரமைப்பு மற்றும் கட்டுமாணப் பணிகளுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாமலிருக்கலாம். தற்போது கிடைத்துள்ள நிதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடி மேலதிக நிதி மானியங்களை வழங்க நடவடிக்கை எடுப்பேன். முன்னுரிமைகள் அடிப்படையில் இங்குள்ள இந்து ஆலயங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர் உட்பட இந்து ஆலய நிர்வாகத் தரப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts