Ad Widget

யாழ்.மாவட்டப் பாடசாலைகளில் பசும்பால் விநியோக திட்டம் ஆரம்பம்

milk-studentசரியான போசாக்கு நிறைந்த தேசம் ஆரோக்கியமான சுறுசுறுப்பான இளைஞர் பரம்பரை என்ற தொனிப்பொருளிலான பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் விநியோக திட்டம் யாழ்;.மாவட்டப் பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டப் பாடசாலைகளில் மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தை இன்றைய தினம் துறைசார்ந்தோர் ஆரம்பித்து வைத்தனர்.

இம்மாதம் 15 ஆம் திகதி இத்தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அதனடிப்படையில் மேற்படி நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் யாழ்;.மாவட்ட பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Posts