Ad Widget

யாழ். மாநகர சபையின் புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (26) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மாநகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் jaffna.mc.gov.lk என்ற மாநகர இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் குறைகேள், பொதுமக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை பதிவிடக்கூடிய வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர சபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Related Posts