Ad Widget

யாழ்.மாநகர சபையின் கீதத்தை மாற்ற ஈ.பி.டிபியினர் முயற்சிக்கவில்லை: யாழ். முதல்வர்

jaffna_major_yogeswari_CIயாழ்.மாநகர சபையின் கீதத்தில் பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கருத்துக்களும் இடம்பெற வேண்டும் என்பது ஒரு சிலரின் கருத்தே தவிர ஒட்டுமொத்த ஈ.பி.டி.பி யின் கருத்தல்ல என யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர சபையின் கீதத்தில் பௌத்த மதம் சார்ந்த கருத்துக்களும் இடம்பெறவேண்டும் என மங்களநேசன் என்ற ஒரு நபரே கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தக்கருத்து ஈ.பி.டி.பி யின் கருத்து அல்ல. அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே எம்மால் பார்க்கப் படுகின்றது.

மேலும் கீதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனையினை நல்ல நோக்கத்திலேயே ஏற்படுத்தினோம். ஆனால் அது தவறாக பிரசாரப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஊடகங்கள் எம்மீது சேறு பூசும் நடவடிக்கையினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

இதேபோல் நாம் பேசும் விடயங்களை உடனடியாகவே ஜ.நாவரை கொண்டு சென்று அதனை பிரச்சினையாகவும் மாற்றிவிடுகின்றன. எனவே இந்த விடயத்தில் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வோம்.

மக்களுடையதும், சமுக, சமய, வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தக்களை முழுமையாகவும், பொதுமக்கள், முன்னிலையிலும் பகிரங்கமாக அறிந்து கொண்டு அதற்கு அமை ய தீர்மானத்தை எடுப்போம் என்றார்.

Related Posts