Ad Widget

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில், யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இவ் உத்தியோகபூர்வ இணையத்தளமானது யாழ். மாநகர முதல்வர் வீ.மணிவண்ணனினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கஜமுகன் இந்த இணையத்தளத்தினை இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இந்த இணையத்தளத்தின் முகவரி http://jaffna.mc.gov.lk

குறித்த நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் வீ. மணிவண்ணன், மாநகர ஆணையாளர் எஸ்.ஜெயசீலன், உதவி மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts