Ad Widget

யாழ்.மாணவர்களுக்கு திறந்த பாடசாலைக் கல்வி வாய்ப்பு!

யாழ். மாவட்டத்தில் தீவகம், யாழ்ப்பாணம், வடமராட்சி, வலிகாமம் ஆகிய கல்வி வலயங்களில் 6 பயிற்சி நிலையங்களில் 6 மாதபயிற்சியாக திறந்த பாடசாலைக் கல்வித்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக வடமாகாணக் கல்வித் திணைக்கள முறைசாராக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கைலாசநாதன் தெரிவித்தார்.

தீவக கல்வி வலயத்தில் நயினாதீவு சிறிகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் ஆங்கிலம், சிங்களம், தொழில் பயிற்சிக் கல்வி தொடர்பாக 60 பேருக்கு இககல்வி வழங்கப்படுகின்றது. வலிகாமம் கல்வி வலயத்தில் மருதனார் மடம் இறையியற் கல்லூரி, தெல்லிப்பழை மாவை கலட்டி, கொல்லங்கலட்டி கணேச முன்பள்ளி நிலையம் ஆகிய இரண்டு நிலையங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் தலா இரண்டிலும் 60 பேர் வரை பங்கு கொண்டிருக்கிறார்கள்.

யாழ். கல்வி வலயத்தின் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி ஆகிய இரண்டு நிலையங்களில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றுகின்றார்கள். வடமராட்சி கல்வி வலயத்தில் வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் கணிதம், அறநெறிக் கல்வி ஆகியவற்றில் 60 இற்கு மேற்பட்டவர்கள் பங்கு பற்றுகிறார்கள்.

பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகிய பலரும் இதில் கலந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சின் நிதி ஒதுக் கீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts