Ad Widget

யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள்

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

mann1

சிற்பங்களை உருவாக்கியுள்ள சிற்பக்கலைஞர் செல்லையா சிவப்பிரகாசத்திடம் இது குறித்து கேட்டபோது; “”மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டார வன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் வைப்பதால் வரலாறு பேணப்படுகின்றது. அத்தகைய ஒரு செயலுக்காக எனது சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

குறித்த மூன்று சிற்பங்களையும் வடிவமைக்கத் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகின்றன. யாழ்.மாநகர முதல்வர் ப.யோகேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிலைகள் வைப் பதற்குரிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்.புல்லுக்குளம், கோட்டையின் சுவர்ப் பகுதி ஆகியவற்றிலும் வரலாற்றைப் பறைசாற்றும் சிற்பங்களை வைப்பதற்கான எனது ஆர்வத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வெளிப்படுத்தியுள்ளேன். எனக்குள்ள மகிழ்ச்சி நான் 1000 கலைஞர்களை உருவாக்கியுள்ளேன்” என்பதுதான். உற்பத்திப் பொருள்களின் விலை மற்றும் கூலி என்பன அதிகரித்துள்ள நிலையில் நிர்ணயித்த தொகையை விட நிதி அதிகரிக்கும் என்றார்.

mann3

சமீபத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் குறித்த மூன்று தமிழ் மன்னர்களது உருவச்சிலைகளை அமைச்சர் டக்ளஸ் அவர்கள் பார்வையிட்டதுடன், அதுதொடர்பில் சிற்பக்கலைஞர் சிவப்பிரகாசத்துடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related Posts