Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள்

பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான என்புமுறிவு உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சு.வித்தியானந்தனின் குடும்பத்தினரால் (அமெரிக்கா) இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, என்புமுறிவு சத்திரசிகிச்சை உபகரணம், வீடியோ மூலம் சிகிச்சை அளிக்கும் உபகரணம், மார்பு சிகிச்சை உபகரணம் போன்ற வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள் அனைத்துலக மருத்துவ நல நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டொக்டர். ரி. சத்தியமூர்த்தியால் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் வழங்கப்பட்டது.

Related Posts