Ad Widget

யாழ். பொது நூலகத்திற்கு 16,000 நூல்கள் அன்பளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16,000 நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

குறித்த அன்பளிப்பை பொது நூலகத்தில் வைத்து நேற்று யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் மற்றும் பிரதம நூலகரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சன்தூ வழங்கி வைத்தார்.

இந்திய மக்களினால் யாழ்.பொது நூலகத்திற்கென அன்பளிப்பு செய்யப்பட்ட சுமார் 16 ஆயிரம் நூல்களே இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு நூல்கள் இருந்துள்ளதாகவும், மிகச் சிறந்த நூல் தொகுதிகள் உள்ளடக்கிய பழம்பெரும் நூலகமாக விளங்கியுள்ளதால், மிக அதிகமான நூல்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென இந்திய துணைத்தூதுவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் மகளீர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை பேராசியர் உட்பட நூலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Related Posts