யாழ்.பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதில்லை- ருவன் வணிகசூரிய

army-ruwan-vanikasooreyaஇராணுவம் உட்பட முப்படையினர் வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர இடையூறுகள் விளைவிப்பதில்லை.

இவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தமது கல்வி உட்பட சகல நடவடிக் கைகளையும் சுதந்திரமாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகவே அவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சுதந்திரமாக நடத்த முடிந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, இராணுவத்தினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழ்ந்து வரும் நாடுகளில் தமது இருப்பைதக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இலங்கையில் பிரச்சினை உள்ளது என்று காண்பிக்க முயற்சிப்பதாகவும் வடக்கு, கிழக்கு. உட்பட நாட்டில் தற்பொழுது சுமுகமான நிலைமை காணப்படுகின்ற போதிலும் தமது சுயலாபத்தை கருத்திற்கொண்டு இவர்கள் பல்வேறு பொய்யான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts