Ad Widget

யாழ்.பல்கலை. மாணவர்களின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது!- இராணுவ கிறிஸ்மஸ் நிகழ்வில் யாழ்.ஆயர் தெரிவிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளும் கவலையளிப்பதாக யாழ். ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட இராணுவக் கட்டளையகம் ஒழுங்கு செய்த 2012ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வின் ஆசியுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகம் தற்போது தனது கல்வி சார் சகல செயற்பாடுகளையும் முற்றாக நிறுத்தியுள்ளது மாணவர்களின் கல்வியினை மேலும் பாதிக்கும்.

இந்நிலைமை மேலும் நீடிக்காமல் சம்பந்தப்பட்ட சகலரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இங்கு இராணுவத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா, யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, இராணுவ உயர் அதிகாரிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts