Ad Widget

யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடல்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நேற்று சனிக்கிழமை மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்ட உபகுழுவொன்று உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளது.

இதன்போது ஜனவரி மூன்றாம் திகதிக்கு முன்னர் சரியான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 17 பேர் நிரந்தர நியமனம் கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல்கலைக்கழக முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

எனினும் இதுவரையிலும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே மீண்டும் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மயங்கி வீழ்ந்தமையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts