யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பலாலி இராணுவ படைத்தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கிருந்து யாழில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனை வழிபட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே இதனைத் தொடர்ந்து யாழ். நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



