Ad Widget

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்கள் ஒன்றியத்தினால் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவின் ஜே.கே நிறுவனமும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் இணைந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை முன்னாள் ஊழியர் ஒன்றியத்தின் தலைவர் மனோகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசத்தின் கனிமவளங்களுக்கு சேதம் ஏற்படாத வகையிலும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசிகளை கட்டுப்படுத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவுள்ளதாகவும் மேலும் முன்னாள் பணியாளர்களுக்கு நட்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts