Ad Widget

யாழ். குடாநாட்டில் கிராமசேவையாளர்கள் ஊடாக விசாரணைக்கென அழைப்பு விடுத்து தொடரும் கைதுகள்

யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்குக் கொண்டுசெல்லப்படுவதனால் மேலும் மக்கள் பீதியில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் எனத் தெரியவருகின்றது.

இதுவரை யாழ்ப்பாணத்தில் சுமார் 40க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி, கோப்பாய், சுன்னாகம், வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் வசித்தவர்களையே இவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதேவேளை புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களையும் மீண்டும் விசாரணைக்கு வருமாறு கிராம சேவையாளர்கள் ஊடாக கடிதங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சிலரை விசாரித்துவிட்டு விடுதலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கைதானவர்களின் தொகையைச் சரியாகக் கணக்கிட முடியவில்லை.

இக் கைதுகள் தொடர்பாக பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிட மறுப்பதால் கைதுசெய்யப்பட்டவர்களின் முழுமையான விபரங்களையும் கைதுக்கான காரணத்தினையும் அறியமுடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts