Ad Widget

யாழ்.கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தும் ஆளுநர்; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

teachers-unionவீரசிங்கம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்குப் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரை வருகை தருமாறு வடமாகாண ஆளுநர் கட்டாயப்படுத்தியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளதாவது:

நிகழ்வு ஒன்றுக்கு பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்கள், பிரதி அதிபர்கள், அதிபர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளை கலந்துகொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, வன்மையாகக் கண்டிக்கின்றோம். பாடசாலை விடுமுறை நாளாக உள்ள நிலையில், பரீட்சை நடைபெறும் நேரத்தில், தேர்தல் காலமக உள்ள வேளையில் இவ்வாறு கல்விச் சமூகத்தைக் கட்டாயப்படுத்தி வரவழைப்பது கண்டிக்கத்தக்க செயல். இதனைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவுள்ளோம் என்றார்.

Related Posts