Ad Widget

யாழ்.ஆயர்- நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு

ayar-netharlandயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லூயிஸ் பியட் யாழ்.ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலையே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இச் சந்திப்பு தொடர்பில் யாழ்.ஆயர் கருத்து தெரிவிக்கையில்,

இங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆராய்யும் நோக்குடன் தூதுவரும் அவரது பாரியாரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ் கோட்டைப் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

யாழ் நகரில் 30 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை இன்று புனரமைக்கப்பட்டு சுற்றுலாத்தளமாக மாற்றடைந்து வருகின்றது இதன் மூலம் பலர் நன்மை அடைந்து வருகின்றார்கள் பல விடயங்களை பார்க்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை முழுமையாக புனரமைத்து யாழ். மாநகர சபையிடம் வழங்கினால் அதனை அவர்கள் மக்களின் பாவனைக்காக செம்மையாக பயன்படுத்துவார்கள் என்று தெரிவித்தேன்.

இச்சந்திப்பில் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் என்னிடம் சில கேள்விகளை தூதுவர் எழுப்பியிருந்தார் குறிப்பாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும் என்று அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

நிற்பந்தக்களுக்கு உட்படாமல் மக்கள் சுதந்திரமாக தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக் கூடிய தேர்தலாக இது அமைய வேண்டும் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழர் தரப்பே வெற்றி பெற்றுள்ளது. இம் முறையும் அந்த தரப்பே வெற்றிபெறவேண்டும் என்று எல்லா மக்கள் விருப்பம் என்றாலும் மக்களுடை தீர்வே இறுதியானது என்று தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் 25 வருடத்திற்குப்பின்னர் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தும் எல்லா மக்களும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் இதில் இராணுவமோ பொலிஸாரோ தலையிடாமல் இருக்கவேண்டும் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினேன் என்றார்.

வடமாகாணத்தில் வாழுகின்ற மக்கள் இந்த தேர்தலில் தாங்கள் விரும்பிய பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களும் தமிழ் மக்களிற்கான அவசியமான செயற்பாடுகளை முன்வைத்து எல்லோருடைய அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்றார்.

Related Posts