Ad Widget

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் எழுபது வைத்தியர்களுக்கு பற்றாக்குறை. கேதீஸ்வரன்.

stethoscope-doctor-nerusயாழ் . மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மேலும் 70 வைத்தியர்கள் தேவையாக உள்ளனர் என யாழ் . மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ . கேதீஸ்வரன் தெரிவித்தார் .

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக ஆராயப்பட்ட போதே பிராந்திய சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் . மாவட்டத்தில் வைத்திய அதிகாரிகள் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது . கடந்த வருடாந்த இடமாற்றத்தின்போது யாழ் . போதனா வைத்திய சாலையில் இருந்து 36 வைத்தியர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளமையால் , இங்கு கடமையாற்ற இன்னும் 70 வைத்தியர்கள் தேவையாக உள்ளனர் .

மேலும், யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட யாழ். மாவட்டத்தில் 44 வைத்தியசாலைகள் உள்ளன. இதில் 9 பிரதேச வைத்தியசாலைகளுக்கும் 7 ஆரம்ப வைத்திய பிரிவுகளுக்கும் நிரந்தர வைத்தியர்கள் இல்லை . இவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும். மாகாண சுகாதார அமைச்சிற்கு அதிகாரம் இல்லை. ஒரு வைத்தியசாலையில் இருந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மாறுவதானால் மத்திய சுகாதார அமைச்சால் மட்டுமே மாற்றமுடியும் . மாகாண சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் இல்லை . வைத்திய அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இடமாற்றம் செய்ய முடியும் .

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உள்ளக இடமாற்றத்தின் போது நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு,மருதங்கேணி மற்றும் அம்பன் ஆகிய வைத்தியசாலைகள் உட்பட 9 இடங்களுக்கு விண்ணப்பம் கோரியுள்ள போதும் எவரும் விண்ணப்பிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றத்தின்போது யாழ் . மாவட்டத்தில் உள்ள 24 பிரதேச வைத்தியசாலைகளுக்கு விண்ணப்பம் கோரியிருந்தோம். ஆனால் 14 வைத்தியசாலைகளுக்கும் யாழ் . போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர் நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. ஏனைய வைத்தியசாலைகளுக்கு எவரும் விண்ணப் பிக்கவில்லை. வைத்தியர்கள் விரும்பி கடமை ஏற்றால் மட்டுமே நியமனம் செய்யமுடியும். எனினும் அடுத்த வருடம் இத்தகைய பிரச்சினைகளை ஓரளவு தீர்க்கமுடியும் என்றார்.

Related Posts