Ad Widget

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 இரண்டாவது தடுப்பூசி வழங்கும் பணி ஓக.9,10,11ஆம் திகதிகளில்!!

கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த ஜூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09 ஆம், 10 ஆம், 11 ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன – என்றுள்ளது.

Related Posts