Ad Widget

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு பழைய மாணவர் சங்கம் வழங்கும் நாடக விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கலை ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒன்றினைவில் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை தலைநகரில் வெகு விமர்சையாகவும், கலை இலக்கியங்களை வளர்க்கும் முகமாகவும் நடாத்த பட்ட இசை, நாட்டிய மற்றும் பட்டிமன்ற நிகழ்வுகள் கலை ஆர்வலர்கள், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றமையை தொடர்ந்து, மீண்டும் கல்லூரியின் பெருமையையும் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவுக்கொண்டாட்டத்தின் இன்னுமொரு நிகழ்வாகவும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு பழைய மாணவர் சங்கம் வழங்கும் “நாடக விழா” நாளை (ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை), பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மாலை 06:00 மணி தொடக்கம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும் “நாடக விழா” வில், 1975ல் வானொலியில் ஒலிபரப்பாகி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் பல தடவைகள் மேடையேற்றப்பட்ட  வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடக படைப்பாளர் வரணியூரான் எஸ் எஸ் கணேசபிள்ளையின் நகைச்சுவை  நாடகமான “அசட்டு மாப்பிள்ளை”யும், 1968ல் யாழ் ஈழநாடு நாடக போட்டியில் பரிசில் பெற்று நூல் வடிவமும் பெற்று 1978ல் வானொலியில் ஒலிபரப்பாகி 1995ல் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிய  உடுவை தில்லை நடராஜாவின்  ஓரங்க நாடகமான “புதிய கதையின் ஆரம்பம்”மும்  நடைபெற உள்ளது.

“அசட்டு மாப்பிள்ளை” மற்றும் “புதிய கதையின் ஆரம்பம்” ஆகிய நாடகங்களில் இலங்கையின் புகழ் பூத்த கலைஞர்களான, ராஜபுத்திரன் யோகராஜன் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன தமிழ்சேவைக் கட்டுபாட்டாளர், வானொலி மேடைக்கலைஞர்), மயில்வாகனம் சர்வானந்தா (வானொலி அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மேடைக்கலைஞர்), லூக்காஸ் திருச்செல்வம் (வானொலி அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மேடைக்கலைஞர் ), எஸ் சக்திதரன் (வானொலி மேடைக்கலைஞர், பிரதிச் சுங்க அத்தியட்சகர்), ரஞ்சனி ராஜ்மோகன்

(சிரேக்ஷ்ட மேடை தொலைக்காட்சி அறிவிப்பாளர், நடிகை, ஊடகவியலாளர்), ஏ எம் சி ஜெயஜோதி (வானொலி தொலைக்காட்சி மேடை மற்றும்  குறும் திரைப்பட நடிகை), வீ ரி ராஜேந்திரன் (வானொலி, தொலைக்காட்சி, மேடை நடிகர். அறிவிப்பாளர். வங்கி ஓய்வு நிலை முகாமையாளர்), ரி துமாகாந்தன் (இந்துவின் மைந்தன், மேடைக்கலைஞர்), ரி சிவநாதன் (மேடைக்கலைஞர், முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மாவட்ட முகாமையாளர்), கயிலைநாதன் கஜானன் (வங்கி கனிக்ஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர், வானொலி மேடைக்கலைஞர்) மற்றும் உடுவை எஸ் தில்லைநடராஜா (முன்னாள் அரச அதிபர், கல்வி மேலதிக செயலாளர்,வானொலி மேடைக்கலைஞர்) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மருகி செல்லும் கலை இலக்கிய மற்றும் நாடக துறை ஆர்வம் மற்றும் மேடை நாடக நிகழ்வுகளையும் மீண்டும் துலங்க வைத்து, தலைநகரில், கலை இலக்கிய, நாடக ரசனையையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்தி, எமது கல்லூரியின் பெருமையையினையும் எடுத்துச் செல்லும்  என்பதில் எவ்வித ஐயமுமில்லை. புகழ் பூத்த கலைஞர்களினாலும் சிறந்த நாடக நிகழ்வுகளாலும் நிறையவுள்ள, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கதினுடைய “நாடக விழா” நிகழ்வில், கலை இலக்கிய, நாடக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

Related Posts