Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் காலமானார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியும், பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறை ஆகியவற்றின் தாபகத்  தலைவருமாகிய வாழ்நாள் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் நேற்று (09-09-2015) காலை கொழும்பில் காலமானார்.

prof-kunam-large

கொழும்பு பல்கலைக் கழக பௌதிகவியற்றுறைப் பட்டதாரியாகிய பேராசிரியர் குணரட்ணம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் தனது கலாநிதி பட்டம் உட்பட பல உயர் தகைமைகளைக் கொண்ட ஒருவர்.  பௌதிகவியலில் பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு, ஆய்வுக்கான பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட ஒரு முதுபெரும் கல்வியியலாளர் ஆவார்.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறைகளை ஆரம்பித்து அவற்றின் துறைத் தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும் பதவி வகித்தவர். 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்து, விஞ்ஞானத் துறைக்கு ஆற்றிய சேவையின் காரணமாக யாழ். பல்கலைக்கழகம் இவருக்கு வாழ் நாள் பேராசிரியர் தரத்தினை வழங்கியிருந்தது.

ஓய்வுக்குப் பின்னரும் யாழ். பல்கலைக்கழக பௌதிகவியற்றுறைக்காக வருகை நிலை விரிவுரையாளராகவும், வெளிவாரித் தேர்வாளராகவும் கடமையாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Emeritus Professor Kanthia Kunaratnam 

BSc(Hons.)(Ceylon), DIC, PhD(London), FRAS(London), Chartered Physicist & Fellow of Inst.Physics(London), Hon. DSc(Jaffna)

Professor K. Kunaratnam has passed away today 09 September 2015 in Colombo. While the community of University of Jaffna is grieving for one of its outstanding founder academic and former vice-chancellor, it expresses deepest condolences to his family.

May Professor K.Kunaratnam rest in peace. 

 

A short biography of Professor Kanthia Kunaratnam

Professor Kanthia Kunaratnam was a physicist, academic and former vice-chancellor of the University of Jaffna. Professor K. Kunaratnam joined the University of Ceylon, Colombo in 1954 and graduated in 1958 with a first class honours BSc degree in physics.

After graduation Professor K. Kunaratnam worked at the University of Ceylon, Colombo and University of Ceylon, Peradeniya. Later, he read at Imperial College London between October 1960 and July 1963, and obtained a DIC and a PhD.

Professor K. Kunaratnam was a visiting fellow and lecturer in geophysics at the Department of Geology, University of Durham between January 1971 and September 1971. He was also a visiting fellow at the Department of Physics, Queen Elizabeth College from October 1971 to December 1971.

Professor K. Kunaratnam was appointed as the Founder Head of the Department of Physics at the Jaffna Campus of the University of Sri Lanka in April 1975. He remained head of the department until October 1980. He was a visiting lecturer at the School of Physics, University of Science, Malaysia between Jan 1981 and October 1981. He then returned to the University of Jaffna and resumed being Head of the Department of Physics, serving until February 1985. He was a visiting fellow and professor at the Department of Geophysics, University of Edinburgh between October 1988 and August 1989. He was a visiting fellow at the Department of Earth Sciences, Bullard Laboratories, University of Cambridge between Sept 1989 and October 1989.

Professor K. Kunaratnam was the Founder Head of Department of Computer Science at University of Jaffna between January 1991 and November 1993. He then served as Head of the Department of Physics from March 1994 to April 1994.

Professor K. Kunaratnam served as the dean of Faculty of Science twice, from January 1977 to May 1978 and January 1985 to March 1988. He served as the vice-chancellor of university of Jaffna between April 1994 and February 1997. Professor K. Kunaratnam retired in April 2000. He was serving as a emeritus professor at the Department of Physics till his demise.

Professor K. Kunaratnam was elected as a fellow of the Royal Astronomical Society in 1998 and fellow and chartered Physicist of the Institute of Physics in 1999. He was awarded an honorary doctorate from the University of Jaffna in 2001.

 

Citations of Prof.K.Kunaratnam’s outstanding thesis work by eminent scientists

Profile of Prof. K. Kunaratnam from department of Physics, University of Jaffna.

Biography of Prof. K.Kunaratnam from Wikipedia

Related Posts