Ad Widget

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம் – போதகரை தனி அறையில் சந்தித்தவருக்கே தொற்று

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே இவ்வாறு கொரோனா (COVID -19) தொற்று உள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமைமத  போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த மதபோதகர் சுவிஸ் திரும்பிய நிலையில் அங்கு அவருக்கு கொரோனோ இருப்பது உறுதி செ்ய்யப்பட்டுள்ளது.  .இந்நிலையில் இது தொடர்பில் அவரது சந்திப்பபுக்களில் கலந்துகொண்டவர்க்ள தனிமைப்படுத்தப்பட்டு பரிசொதனை செய்யப்படும் ந்வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு அநுராதபுரத்தில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட  வைரஸ் மாதிரிகளில் யாழ்ப்பாணத்தில் போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசியவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

 

 
தற்போது அநுராதபுரத்தில் தான் பரிசோதனைகள் இடம் பெறுகின்றன. இதனை யாழ்ப்பாணத்தில் செய்தவதற்குரிய தன்னார்வ பரிசோதனையாளர் குழு தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்பாடுகள் குறித்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பரிசோதனைகள் யாழ்ப்பாணத்திலேயே நடைபெற வசதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts