யாழில் 7 டைனமேட் வெடிகள் மீட்பு

வெடிக்க வைக்கக் கூடிய நிலையில் இருந்த 7 டைனமேட் வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

யாழ். குருநகர் இறங்குதுறைமுகப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை கடற்படையினரால் இவை மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்கள்.

இறங்குதுறை பகுதியில் மீன்பிடி படகு ஒன்றின் கீழ், பொலித்தீனால் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் குறித்த 7 டைனமேட் வெடிகளும் இருந்துள்ளன.

பண்ணைக் கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இறங்குதுறை பகுதியில் குறித்த 7 டைனமேட் வெடிகளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த டைனமேட் வெடிகள் தொடர்பில் எவரையும் கைதுசெய்யவில்லை என்றும், வெடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 7 டைனமேட் வெடிகளையும் நீதிமன்றின் உத்தரவுடன் அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts