Ad Widget

யாழில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன

யாழ்பாணத்தின் பாதுகாப்புக்கு தேவையான இராணுவ முகாம்களை தவிர அங்கு காணப்பட்ட 59 இராணுவ முகாம்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தின் வசமிருந்த 12,901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி கூறியுள்ளார்.

யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்டளைத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related Posts