Ad Widget

யாழில் 1,128 ஹெக்டெயர் நிலப்பரப்பில் திராட்சை பயிர்ச்செய்கை

grapes-on-vineயாழ். மாவட்டத்தில் திராட்சை பழப்பயிர் மூலம் விவசாயிகள் அதிக இலாபத்தினை பெறமுடியுமென்றும், தற்போது, 1,128 ஹெக்டெயர் திராட்சை பயிரிடப்படுகின்றதாகவும் யாழ். மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் சிறிபாலசுந்தரம் தெரிவித்தார்.

கடந்த 4 வருடங்களுக்கு 300 ஹெக்டெயர் திராட்சை பயிரிடப்பட்டதாகவும், யுத்தத்தின் போது 22 ஹெக்டெயராக வீழ்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், கடந்த காலங்களில் திராட்சை பயிர்ச்செய்கை மேம்படுத்தப்பட்டு, 175 விவசாயிகளுக்கு திராட்சை பயிர்ச்செய்கைக்கான, திராட்சைக் கொடி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 22 ஹெக்டெயர் ஆக இருந்த திராட்சை பயிர்ச்செய்கை 2012ஆம் ஆண்டு 102 ஹெக்டெயராக உயர்வடைந்தது, பின்னர் அது 2013 ஜனவரி முதல் 128 ஹெக்டெயராக அதிகரிக்கப்பட்டு பயிரிடப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

1960ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திராட்சை பயிர் உற்பத்தி இலங்கையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்று வந்ததாகவும், யுத்தத்தின் பின்னர் பாரிய வீழச்சியை கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது திராட்சை பயிர்ச்செய்கை கரவெட்டி, நெல்லியடி, உடுவில், புத்தூர், கோப்பாய், கைதடி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களில் பயிரிடப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

திராட்சை பயிர் செய்கை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தால் எதிர்வரும் காலங்களில் 200 ஹெக்டெயரை அடைய முடியுமென்றும் அவர் கூறினார்.

தற்போது, தீவுப் பகுதிகளில் மண்கும்பான், அனலைதீவு பிரதேசங்களில் தற்போது 1000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் திராட்சை பயிரிடப்பட்டு வருகின்றதாகவும், உரிய முறையில் பயிரிட்டு பராமரிக்கப்பட்டு வந்தால், ஒரு தடவையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலாபத்தினை பெறமுடியுமென்றும் யாழ். மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts