யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

அல்வாய் கிழக்கை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன் மூன்று நாட்கள் தொடர் காய்ச்சலின் காரணாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை , தாயார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை (26) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Posts