Ad Widget

யாழில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்குச் சீருடை

auto2யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் இனி சீருடையுடனேயே வாடகைக்கான வண்டிகளை ஓட்ட வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்கு என அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களிலேயே இனிமேல் வாடகைக்கான முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநகர சபை செய்திக் குறிப்பொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன், பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் முச்சக்கர வண்டியில் தெரியும் வண்ணம் பொருத்தப்பட்டிருப்பது அவசியம். முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

முச்சக்கர வண்டிகளை ஓட்டும் சாரதிகள் சீருடை அணிந்திப்பது அவசியம். சீருடை அணியாத சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியும் வழங்கப்பட மாட்டாது.

முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் அறிவுறுத்தல் மற்றும் யாப்பு விதிகளுக்கு அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கட்டுப்பட்டு ஒழுகவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts