Ad Widget

யாழில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!! மூவர் கைது!!

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை பளையில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்த குறித்த டிப்பரை பொலிஸார் இடைமறித்த போது டிப்பரின் சாரதி, பொலிஸாரை உதாசீனம் செய்துவிட்டு வேகமாக சென்றுள்ள பொதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிப்பர் வாகனத்தில் இருந்த மூன்று போரையும் கைது செய்த பொலிஸார்,அவர்களை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts