Ad Widget

யாழில் மணப்பெண் தேடும் அமைச்சர்

mervin-visttojaffnaயாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா ‘யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்’ என பொது மக்களிடம் கோரியுள்ளார்.

யாழ்.குருநகர் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘யாழ் மாவட்டத்திற்கு நான் பல தடைவகள் வருகை தந்திருக்கின்றேன். இந்த முறை நான் வருகை தந்தததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.

எனது பழைய நண்பர்கள், நான் திரிந்த இடங்கள் எல்லாம் சுற்றி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிருக்கின்றது. எனக்கு யாழை விட்டு போகவே விருப்பவில்லாமல் இருக்கின்றது. இதனால் எனக்கு இங்கு ஒரு ‘ மணப்பெண் தேவை’ என்று அவர் கோரிக்கை விடுத்ததோடு ‘ என்னைக் கண்டு நீ வாழ உன்னைக் கண்டு நான் இன்பம் பொங்கும் இன்பத்தீபாவளி’ என்ற பாடலைப் பாடி அங்கு கூடியிருந்த மக்களை மகிழ்வித்துள்ளார்.

இதேவேளை

‘மக்களின் உரிமையில் தலையிடுபவர்களை மரத்தில் கட்டிவையுங்கள். நான் அவர்களைக் பார்த்துகொள்கிறேன்

நாவந்துறைப் பகுதியில் சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தடைசெய்யவேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் உரிமையில் தலையிடுவதற்கு பௌத்த துறவிகளுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் அதிகாரம் கிடையாது.

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் எம்மைவிட அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் நீங்கள். யுத்தம் முடிந்து தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மக்கள் அபிவிருத்தியின் பலனை அனுபவித்துகொண்டு இருக்கின்றார்கள்.
இந்த அபிவிருத்தி இங்கு வாழும் மக்களுக்கே தவிர மாவை சேனாதிராசாவிற்கு அல்ல.

பல உயிர்களை காவுகொண்ட மாவை சேனாதிராஜா, இரா சம்பந்தன் போன்றோர்களை இல்லாது ஒழித்து மக்கள் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யவேண்டும்.

இதயம் இல்லாத வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்கு ஜாதி, மதத்தினை போதித்து மனிதர்களின் உயிர்களை காவுகொண்டார்.

அத்துடன், துரையப்பா முதல் நீலம் திருச்செல்வம் வரையானவர்களின் உயிர்களையும் பறித்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில்தான் இந்த நாட்டின் முப்படைகளும் தமிழ் மக்களின் உயிர்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டார்கள்.

யுத்தத்தினால், இழந்தவற்றினை மீண்டும் பெற்றுகொடுக்கும் நோக்கத்துடனேயே கல்வியிலும், செல்வத்திலும் இந்த பகுதி மக்களை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி பல்வேறு செற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

நான் களனிப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். இங்கு வாழும் மக்களுக்கு பணியாற்ற அதிகம் விருப்பம் கொண்டுள்ளேன். ஜனாதிபதி விரும்பினால் நான் யாழ்ப்பாணத்திற்கு வந்து மக்களுக்கு சேவையாற்ற தயாராக இருக்கின்றேன்.

இங்கு வாழும் 6000 முஸ்லிம் மக்களும் ஜனாதிபதியை நம்புங்கள். அவர் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவார்’ என்று தெரிவித்தார்.

Related Posts