Ad Widget

யாழில் புதிய படைமுகாம்களை திறந்து வைத்த ,பாதுகாப்பு செயலாளர்

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் அதிகளவு இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத்தினரும், அரசாங்கமும் கூறிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் இரு நாள் தங்கியிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ புதிய இராணுவ முகாம்கள் சிலவற்றை திறந்து வைத்துள்ளார்.

குறிப்பாக பலாலியிலுள்ள புதிய இராணுவ முகாம் ஒன்றினையும், யாழ்.நகரில் சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானத்தை ஆக்கிரமித்து அதில் கட்டப்பட்டுள்ள இராணுவ முகாமையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திறந்து வைத்துள்ளார்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் குறிப்பாக மாதகல், காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் இராணுவம், தமிழர்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து புதிதாக அமைத்துள்ள நிரந்தர இராணுவ முகாம்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் படையதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், படையினருக்குள்ள தேவைப்பாடுகள் குறித்தும் நேரடியாக அவதானித்திருப்பதாக அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் ஊடகவியலாளார் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி யாழில் 13ஆயிரம் பi டயினரே தற்போது இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் மாவட்டத்தில் வளமான பிரதேசங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு, நாளுக்கு நாள் புதிய புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதிய இராணுவ முகாம்களை தாம் அமைத்திருக்கவில்லை எனவும், இராணுவத்தை வெகுவாக குறைத்துவிட்டோம் எனவும், கூட்டமைப்பினர் இராணுவம் குறித்து பொய் கூறுகிறார்கள் எனவும் அரசாங்கம் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இருநாள் விஜயத்தில் யாழ்.மாவட்டத்தில் மட்டும் இரு புதிய படைமுகாம்களை திறந்து வைத்திருப்பதுடன், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர படை முகாம்கள் பலவற்றை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
jaffna_camp_visit_02

Related Posts