யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவர் காவல்துறையினருக்கு கையூட்டல் வழங்க முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.