Ad Widget

யாழில் பிரதமர் தலைமையில் கர்ப்பிணிதாய்மாருக்கு போசாக்கு திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறைநிறை பிள்ளை பிறப்பை இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 2000 பெறுமதியான போசாக்கு பொதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோசி சேனாநாயக்க, மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடக்கு ஆளுநர் பளிகக்கார, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் , சுரேஸ்பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா , யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், அதிகாரிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மாரும் கலந்துகொண்டனர்.

Related Posts