Ad Widget

யாழில் நிறுவவிருந்த 4 தொழிற்சாலைகளுக்கான அனுமதி மறுப்பு

enviromental-authorityயாழ். குடாநாட்டில் புதிதாக நிறுவ பிரேரிக்கப்பட்ட நான்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சூழல் அதிகார சபை மறுப்பு தெரிவித்துள்ளது.

நீர் நிலைகளுடன் தொடர்புடைய நான்கு திட்டங்களாக இவை அமைந்திருந்ததுடன், இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு, சூழல் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்படுத்தலை பெற்றுக்கொள்ளும் வகையில், குறித்த திட்டங்கள் பற்றிய பிரேரணைகள் மத்திய சூழல் அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், குறித்த திட்டங்களுக்கு அமைய தொழிற்சாலைகள் யாழ்ப்பாண குடா பகுதியில் நிறுவப்படின், குடாநாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடுமென குறிப்பிட்டு, இந்த திட்டங்களை மத்திய சூழல் அதிகார சபை தள்ளுபடி செய்திருந்தது.

இதனை ஏற்றுக்கொள்ளாத முதலீட்டாளர்கள், ஜனாதிபதியினூடாக இந்த திட்டங்களுக்கு மீண்டும் அனுமதியை கோரியிருந்த போதிலும், குறித்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால், யாழ். குடா பகுதியில் குடிநீர் பிரச்சினை பாரிய சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் என்பதை காரணம் காட்டி, மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

பழரச உற்பத்தி தொழிற்சாலை, மென்பான உற்பத்தி தொழிற்சாலை, மினரல் வோட்டர் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் திட்டங்கள் இவ்வாறு நிறுவ மத்திய சூழல் அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

Related Posts