Ad Widget

யாழில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

girl-hanging-rope-suicideயாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி குடும்ப வன்முறை கடன் தொல்லை தொழில் வாய்ப்பின்மை காதல் தோல்வி மற்றும் கள்ளக் காதல் விவகாரம் இளவயதுத் திருமணங்கள் விவகாரத்து திருமணத்திற்கு முன்னரான குழந்தை இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப் பதிவேடு குறிப்பறிக்கை கோடிட்டுக்காட்டியுள்ளது.

தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விளிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் பாடசாலை மட்டத்தில் இருப்பவர்களுக்காக தற்கொலை மற்றிய விளிப்புணர்வு மற்றும் தற்துணிவு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது

Related Posts