Ad Widget

யாழில் சர்வதேச யோகாதினம்!

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகாதினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுமுகமாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகமானது மாபெரும் யோகாபயிற்சி நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

yoga-jaffna

இதனடிப்படையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இந்திய துணைதூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த யோகா தின நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு வாழும் கலை அமைப்பினர் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த யோகா ஆசிரியர்களினால் யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் யோகா பயிற்சியை முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துவருவதாகவும் விரைவில் இச்செயல்முறை பாடசாலை ரிதியில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மேலும் யோகா கலை தொடர்பான பயிற்சிப்பபுத்தகங்கள் இந்திய துணை தூதரகத்தினால் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டதுடன் யோகாசன ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts