Ad Widget

யாழில் குடும்ப விப­ரங்களை சேகரிக்கும் இராணுவம்.

RegPenயாழ்ப்­பா­ணத்தின் சில பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்­தி­னரால் குடும்ப விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர். சங்­கானை, சித்­தங்­கேணி வட்­டுக்­கோட்டை உட்­பட மேலும் சில பகு­தி­களில் கடந்த முதலாம் திகதி முதல் குடும்ப உறுப்­பி­னர்­களின் விபரம், அடிப்­ப­டை­வ­ச­திகள் உள்­ளிட்ட 42 வினாக்கள் அடங்­கிய விண்­ணப்­பப்­ப­டிவம் வழங்­கப்­பட்டு இரா­ணு­வத்தால் விப­ரங்கள் சேக­ரிப்­பட்டு வரு­வ­தாக அவர்கள் மேலும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்­பாக இரா­ணு­வப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய கருத்து ெவளியி­டு­கையில், யுத்­த­கா­லத்தின் பின்னர் வட­மா­கா­ணத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் தலை­ம­றை­வா­கி­யி­ருப்­ப­தாக இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது. ஆகவே அவர்­களை இனங்­கண்டு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு குடும்ப உறுப்­பி­னர்­களின் தக­வல்கள் தேவை­யாக உள்ளது.

அத்­துடன் இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­க­ளுக்கு அடிப்­படை வச­திகள் உள்­ளிட்ட நலன்­புரிச் சேவைகள், மாண­வர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரி­சில்கள் ஆகி­ய­வற்றை வழங்­கு­வ­தற்­கா­க­வுமே அவ்­வாறு விண்­ணப்­பங்கள் கடந்த வாரத்தின் முற்­ப­குதி முதல் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான தக­வல்கள் இரா­ணு­வத்­தி­னரின் சேவை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவே தவிர பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. பொதுமக்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் விடயங்களை யாரும் தவறாக பிரசாரப்படுத்தக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts