Ad Widget

யாழில் கிராம அலுவலர்களின் திறமை பரிசோதிக்க வேண்டும் – அரச அதிபர்

Suntharam arumai_CIயாழ். மாவட்டத்தில் கடமை புரியும் கிராம அலுவலர்கள் திறமையினைப் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. கிராம அலுவலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையினைச் சரிவர செய்ய முடியாதவர்களாக இருபப்தாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்காரணமாக அவர்களின் திறமையினை கட்டியெழுப்பும் பயிற்சித்திட்டம் ஒன்று நடைபெற்று வருவதாக யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் 15 ம் திகதி முதல் நடைபெற்றுவரும் இப்பயிற்சியில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் இருந்தும் இரண்டு கிராம சேவையாளர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இப்பயிற்சியானது, கொழும்பில் உள்ள இலங்கை அபிவிருத்தி நிர்வாக பயிற்சி நிறுவகத்தில் இருந்து நேரடி வீடியோ காட்சி ஊடாக நிறுவகத்தின் திறமை வாய்ந்த வளவாளர்களால் வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இவ்வாறான பயிற்சியானது யாழ் மாவட்டத்தில் முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அனைத்து மட்ட அரசாங்க உத்தியோகத்தர்களும் பயன்பெறும் வகையில் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி

யாழ். மாவட்ட செயலகத்தில் ‘வீடியோ தொடர்பாடல் ஊடகம்’ அறிமுகம்

Related Posts