Ad Widget

யாழில் கடந்த 75 நாட்களில் வீதி விபத்துக்களில் 48 பேர் மரணம்!!

யாழ். மாவட்­டத்தில் வீதி விபத்­துக்­க­ளினால் 75 தினங்­களில் 48 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­துடன் 4ஆயி­ரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கின்­றது.

யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திக­தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட விப­த்­துக்கள் தொடர்­பான பாதிப்பு விபரம் வெளிவந்­துள்­ளது.

குறித்த காலப்­ப­கு­தியில் வாகன விபத்­துக்­குள்­ளாகி 6 ஆயி­ரத்து 300 பேர் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவு நிலை­யிலும் உள்ள 4 ஆயி­ரத்து 850 பேர் எலும்பு முறி­வுக்கு உள்­ளா­கிய நிலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

அவ­சர சிகிச்சைப் பிரிவில் மாத்­திரம் குறித்த 75 நாள் காலப் பகு­தியில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் 48 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

யாழ்.மாவட்­டத்தின் வீதிகள் திருத்தி அமைக்­கப்­பட்டு காபெட் வீதி­க­ளாக மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதும் வாக­னங்­களின் தொகை அண்மைக் காலத்தில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தோடு வாகனச் சார­தி­கள்­வே­க­மாக வாக­னங்­களைச் செலுத்­து­வ­துமே விபத்­துக்­க­ளுக்கு காரணம் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

யாழ்.மாவட்ட வீதி­களில் வீதிப் போக்­கு­வ­ரத்தைக் கண்­கா­ணித்து வரும் பொலிஸார் வாகனப் போக்­கு­வ­ரத்து தொடர்­பான ஆவ­ணங்­களைப் பரி­சீ­லித்து சட்ட நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கு­கின்­றனர்.

ஆனால் வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களோ அதி­க­ரித்த வேகத்தில் வாக­னங்­களைச் செலுத்­துவோர் மீது சட்ட நட­வ­டிக்­கையோ மேற்கொள்ளுவது இல்லை.வாகனம் செலுத்தும் வேகத்தைக் கட்டுப் படுத்தும் வரையில் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியாது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Posts