Ad Widget

யாழில் ஐந்து சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள்

dak-suntharam-arumainayagam-GAயாழ்.மாவட்டத்தில் ஐந்து சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகோரல் நிகழ்வு நேற்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் சுனாமி அனர்த்தங்கள் பற்றி கிராம மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மிகச்சிறந்த தொழில்நுட்பம் தற்போது காணப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தின் 435 கிராம அலுவலர் பிரிவுகளிலும் பாதுகாப்பை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு கடந்த வருடம் (2012) 150 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் (2013) 50 மில்லியன் ரூபாவும் 2014ஆம் ஆண்டிற்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் 365 பாடசாலைகளுக்கு அனர்த்தம் பற்றிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், 21 பாடசாலைகளில் 525 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தற்காப்பு நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் போது அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய முடியும் என்பதற்காகவே என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts