Ad Widget

எரிபொருள் மானியத்தில் வெட்டு: கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு

fishing-boat_CIயாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் மானியத்தின் அளவும் 20 வீதத்தினால் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தக் குறைப்பின் பிரகாரம் சுமார் 600 கடற்றொழிலாளரின் படகுகளுக்கான எரிபொருள் மானியம் வெட்டப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமது திணைக்களத்தினால் சுமார் 3000 கடற்கலங்களுக்கான எரிபொருள் மானிய முத்திரை விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே மார்ச் மாத எரிபொருள் மானியம் வழங்கலில் இந்தக் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியமும் இவ்வாறு 20 வீதத்தினால் வெட்டப்பட்டிருந்தமையினால் அப்பிரதேச மீனவர்கள் பெரும் நெருக்கடி நிலையில் சிக்கியிருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts